Ana lodawa

Slzii.com Bincika

Bincika (Labarai)

Top 10 News Headlines: திமுக தொகுதி பங்கீடு ஸ்டார்ட்.. முக்கிய தகவலை வெளியிடும் பிரதமர்.. 11 மணி செய்திகள் இதோ!
எழும்பூர் ரயில்நிலைய புனரமைப்பு பணிகளால் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் அதிகளவில் மக்கள் பயணிப்பதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஓபிஎஸ் பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார். ஓபிஎஸ் தற்போது தர்மயுத்தம் 3.0-வை யார் சொல்லி தொடங்கினார் என்பது தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - ஐயூஎம்எல் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5 தொகுதிகள் வரை கேட்கும் நிலையில் 3 தொகுதிகளை ஒதுக்க திமுக விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் ராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 தரப்பு போட்டியிடுகிறது.மீரட் - டெல்லி இடையிலான நமோ பாரத் விரைவு ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நேற்று நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் 82 கி.மீ. தூரத்தை 40 நிமிடங்களில் எந்த இடைவெளியுமின்றி கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.களத்தில் அதிமுக தான் உள்ளது. தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, எங்களுக்கு எதிரி திமுக தான். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும். தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், இன்றைய மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி முக்கிய தகவல்களை பகிர்வார் என சொல்லப்படுகிறது.குஜராத்தில் திருமண பதிவிற்கு இனி பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என சட்டம் இயற்ற உள்ளதாக அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. காதல் திருமண மத மாற்றத்தை தடுக்க இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் இடையே 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியது. புதிய அரசு பொறுப்பெற்றபின் இந்தியாவுடன் சுமூக உறவை கடைபிடிக்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் முடிவு செய்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026-02-22 05:59:50

Me kuke yi?

0.045392990112305


Labarai
Labarai

Labarai da Kanun Labarai
எழும்பூர் ரயில்நிலைய புனரமைப்பு பணிகளால் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் அதிகளவில் மக்கள் பயணிப்பதால், தாம்பரம்...
Labarai